மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்குமாறு கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு - மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதால் அவ்வீதியால் பயணம் செய்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த பிரதான வீதியின் ஓரத்தில் மாட்டுக் கழிவுகள், குப்பை கூழங்கள் மற்றும் இறந்த கழிவுகளைக் கொட்டுவதால் அதன் பொலித்தீன் உரைகள் பயணம் செய்வோர் முகத்தில் வீசுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பிரதான வீதியின் அருகில் மூதூர் மத்திய கல்லூரி மைதானம் காணப்படுகின்றது, அதில் காலை மாலை நேரங்களில் விளையாடுகின்ற இளைஞர்களுக்குச் சுவாசிப்பதில் பல இடையூறாகவும் காணப்படுகின்றது.
எனவே இவ்விடயத்தில் மூதூர் பிரதேச சபையினர் குறித்த இடத்தில் அறிவுறுத்தல் பலகைகளை இட்டுத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
