அத்தியாவசிய பொருள் விநியோகம் தொடர்பில் சுகாதாரப்பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை

Covid-19 People Vavuniya
By Thileepan Jun 08, 2021 06:46 PM GMT
Report

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த பயணத்தடைக் காலப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதியைச் சரியாகப் பயன்படுத்தி கோவிட் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டமும் கோவிட் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

சிறிய கிராமமான சகாயமாதாபுரத்தில் கடந்த சில நாட்களுக்குள் 54 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு, வவுனியா மாவட்டத்திலும் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறாது அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன், பயணத்தடை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பொருட்டு பிரதேச செயலகம் ஊடாக பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அனுமதியானது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு வழங்கவே வழங்கப்பட்டுள்ளது.

அதனை வர்த்தகர்கள் சரியாக வேண்டும். பல வர்த்தகர்கள் அவ்வாறான பாஸ் அனுமதியைப் பெற்று தமது வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். வாகனங்களில் விற்பனை செய்வோர் நிலையாக ஓர் இடத்தில் நின்று வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் வர்த்தக நிலையங்களிலும், குறித்த வாகனங்களின் முன்னும் மக்கள் குவிகின்றனர். இது சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கேள்விக்குட்படுத்துவதுடன், கோவிட் பரம்பலுக்கும் வழிவகுக்கின்றது.

எனவே, வர்த்தக நிலையங்களுக்கு மக்களை அழைக்காது பாஸ் அனுமதியை முறையாக நடைமுறைப்படுத்தி வீடுகளுக்குப் பொருட்களை வழங்குவதன் மூலம் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்த முடியும். சுகாதாரப் பிரிவினர் ஆகிய நாம் இரவு பகல் பாராது கோவிட் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக எமது குடும்பங்களைக் கூட கவனிக்காது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வேலை செய்கின்றோம்.

எனவே எமது பணிக்கு ஒத்துழைப்பு வழங்கி கோவிட் பரம்பலை தடுக்க முன்வாருங்கள். நாம் மட்டும் செயற்பட்டு கோவிட்டை கட்டுப்படுத்த முடியாது. மாவட்டத்தின் உண்மை நிலைமையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலமே கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US