ஈழத்தமிழர்கள் தொடர்பில் விஜய்யிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்க தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு, தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கத்திற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் (13.05.2026) தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதற்கான அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்க தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கவும் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை