அதிரடியாக தனது பலத்தை சட்டசபையில் உறுதிப்படுத்தியது தவெக
144 உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் சட்டசபையில் தனது பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம் தவெக ஆதரவு கோரிக்கைக்கு 22 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
இதேவேளை உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சி வெளிநடப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 48 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல், அறிகுறிகள் நீடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இரண்டாம் இணைப்பு
இன்றைய தினம் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளது.
இந்த நிலையில் எண்ணி கணிக்கும் முறையில் சற்று முன் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முதன் முறையாக தேர்தலில் தோற்றி யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்தாலும் இன்றைய தினம் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளது.
இந்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆட்சிக்கு ஆதரவு கோரியுள்ளார் விஜய்.
அதன்படி தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.
வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஆதரவு
இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது ஆதரவு உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் உரையாற்றி வருகிறார்.

சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும். திருச்சி கிழக்கில் விஜய் பதவி விலகியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நியமனம்
மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன. இதனிடையே அதிமுகவில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.