மூன்றாம் தவணையை நீடிக்குமாறு கல்வியமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பாடசாலை மாணவர்களுக்கான இந்த வருடத்துக்கான மூன்றாம் தவணையை நீடிக்குமாறு கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறுதி பாடசாலை தவணையை, அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்குமாறு, தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி அமைச்சுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி,தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்காகவும், பரீட்சைகளை நடத்துவதற்கான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய,கோவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைவாக சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை கருத்தில் கொண்டு குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இதேவேளை,தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்களுடன் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
