ஜனாதிபதி அநுரவிடம் கேப்பாபிலவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
தங்கள் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேப்பாபிலவு மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேப்பாபிலவு மக்கள் தங்கள் சொந்த காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் 74 குடும்பங்களை சேர்ந்த 59.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
பாரியளவிலான நிலப்பரப்பில் இராணுவத்தினர்
இந்த பகுதியில் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளதோடு இதில் வரும் வருமானத்தினை 16 ஆண்டுகளாக இராணுவத்தினர் எடுத்து வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் எங்கள் நிலம் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகமாக காணப்பட்ட நிலையில் தற்போது 59 ஆவது படைப்பிரிவு என்ற குறுகிய இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள்.
இந்த காணிக்குள் பொதுச்சொத்தாக பாடசாலை,பொதுநோக்கு மண்டபம்,கூட்டுறவு சங்கம்,ஆலயம்,சுடலை, என்பன காணப்படுகின்றது.

நாங்கள் இன்னும் எங்கள் சொந்த இடங்களில் சந்தோசமாக வாழவில்லை புதிய ஜனாதிபதி எங்கள் விடயத்தினையும் தீர்த்து தரவேண்டும்.
எங்கள் கால்நடைகள் கூட மேய்ச்சல் தரவை இல்லாத நிலையில் பாரியளவிலான நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றார்கள். கால்நடையினை நம்பி வாழும் நாங்கள் எங்கள் இடங்களை விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam