உர மானியத்தை விரைவாக வைப்பிலிடுங்கள்: அரசாங்கத்திடம் எதிரணி எம்.பி. கோரிக்கை
விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உர மானியப் பணத்தை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன(Rohini Kumari Wijeratne-Kaviratne) அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும்போகத்துக்கு தேவையான உரத்தைப் பெற 25 000 உர மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
உர மானியம்
இந்த உர மானியம் குறிப்பிட்ட திகதியில் வழங்கப்படும் என அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல சந்தர்ப்பங்களில் கூறியும் இதுவரை எந்த ஒரு நபரின் வங்கிக் கணக்கிலும் பணம் வைப்பிலிடப்படவில்லை.

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ளன.
வெற்றிகரமான அறுவடையைப் பெற, நெல் பயிரிடப்பட்டு 14 நாட்களில் உரமிட வேண்டும். மானியம் இல்லாததால் உரங்களை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam