மொசாட்டுடன் இணைந்து கிழக்கில் இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட சதி!
தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரணசிங்க பிரேமதாச சிறுபாண்மைக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்காக 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தவுடன் இனங்களிடையே பிரித்தாலும் தந்திரத்தை கையாண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலே தமிழ் சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் ஆதரவு தெரிவித்ததை தட்டிகழிப்பதற்காக ரணசிங்க பிரேமதாச பல்வேறு சூழ்ச்சிகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஊர்காவல் படையை பிரேமதாச ஆரம்பித்ததையடுத்து சிறிலங்கா இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டு இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
மொசாட்டுடன் தொடர்புபடுத்தப்படும் கிழக்கின் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பின்னணி என்ன என்பது தொடர்பான மேலதிக தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.