மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தலில் கண்டன போராட்டம்
சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் (Iyyadurai Nadeshan) 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (31.05.2024) மட்டக்களப்பு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி
மேலும், மட்டக்களப்பு (Batticaloa) காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நினைவேந்தல் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் அனைவரும், மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சமூகப் பற்றாளர் ஐயாத்துரை நடேசன் ஊடகப் பணியோடு, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் பயணிக்க வேண்டுமென்பதில் உறுதியாகச் செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
மேலும், 20 ஆண்டுகள் கடந்தும் அவருக்கான நீதி இதுவரை மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய அரசுகளால் வழங்கப்படவில்லை. எனவேதான், சர்வதேச விசாரணைகளை வேண்டி நிற்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக செய்தி - ராகேஷ், பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |