மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட அறிக்கை! இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் போராட்டம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இத்தாலியின் - மிலானோவில் உள்ள மத்திய ரயில் நிலையம் முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வெளியிட்டிருந்தார்.
கோவிட் - 19 பரவலுக்கு மத்தியில் இத்தாலியில் வசிக்கும் பல இலங்கையர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இணைந்திருந்தனர்.
கோவிட் -19 தடுப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்த போராட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri