பருத்தித்துறை நகர சபையில் தமிழரசு கட்சி உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத தவிசாளர்
பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வின் போது அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவரை சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையால் சபையில் சில நிமிடங்கள் கடும் வாத பிரதி வாதங்கள் இடம்பெற்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம்(29.9.2026) பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு சபை கேட்போர் கூடத்தில் இரண்டு நிமிடம் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதனை தொடர்ந்து நித்திக்குழு அறிக்கையும் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
சபையின் அனுமதி
அதனை தொடர்ந்து சபையின் நிதி கொடுக்கல்களுக்கான சபை அனுமதியும், சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான அனுமதிகளும், சபையின் வருமானம் தரும் மூலங்களை 2027 ஆம் ஆண்டு குத்தகைக்கு விடுவதற்கான விளம்பரங்களை பிரசுரிப்பதற்கான சபை அனுமதியம், நகர சபை எல்லைக்குட்பட்ட நகர சபையால் வருமானம் பெறும் வர்த்தக நிலையங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என்பவற்றுக்கான திண்ம கழிவகற்றல் கட்டணங்களை அதிகரிப்பதற்கான சபை அனுமதி தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்தோடு, திக்க முனை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவதற்கு ஒரு நாள் வாடகைகையாக ரூபாய் 5000/- வும், ஒரு மடத்தியால வாடகையாக 100/- ரூபா அறவிடுவது என்ற தீர்மானமும், நகர சபை மண்டபத்தினை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் ரூபாய் 5000 பெற்று வாடகைக்கும், ஒரு மணித்தியாலத்திற்கு 1000/- ரூபா அறவீடு செய்வதென்றும், திக்க முனை பொது விளையாட்டு கழகத்திற்கான ஒப்பந்தம் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குற்றச்சாட்டு
இவைகளை சபை தொடர்பில் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் தனது முக நூலில் வெளியிட்டார் என்றும் அவரது பெயரை குறிப்பிட்டு அவரை சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் வைத்த கோரிக்கையால் சபையில் சில நிமிடங்கள் கடும் வாத பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

எனினும் சபையிலிருந்து ஊடகவியலாளரை வெளியேற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத தவிசாளர் தொடர்ந்தும் செய்து சேகரிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி உறுப்பினரால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த சபையில் விவாதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டு சபை நிறைவுற்றது.