சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்களம்.. நீதிமன்ற வாயிலில் சிக்கிய ஆதாரம்
இலங்கை அரசியல் களத்தில் தற்போது, ராஜபக்ச குடும்பத்தினரில் பலர் தொடர்பில் வெளியாகி வரும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகள் பேசுபொருளாகியுள்ளன.
இது வரலாற்றில் மிகப் பெரும் அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முக்கிய ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் இடம்பெற்ற இது போன்ற முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்ப நிகழ்ச்சி,