நீதிமன்றத்தில் கோட்டாபயவுக்கு கிடைத்த சிறப்புச் சலுகை.. அநுர அரசில் உலவும் ராஜபக்ச விசுவாசிகள்
நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கிடைத்த சிறப்புச் சலுகையானது, இலங்கை அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாக நீதிமன்றத்திற்குள் நுழைபவர்கள் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, முக்கிய பிரமுகர்களோ யாராக இருந்தாலும் சரி நீதிமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
இந்நிலையில், நேற்றைய தினம், நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய செல்லும் போது, அவர் பரிசோதிக்கப்படவில்லை.
அங்கிருந்த ஒரு சாதாரண அதிகாரி அவரை பரிசோதிக்க முற்பட்ட போதிலும், குறிப்பிட்ட அதிகாரி ஒருவர் அதனை மறுத்து அவரை உள்ளே செல்ல அனுமதித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்துமா? இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,