இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா..! சி.நிதர்சன் கேள்வி
பொலிஸார் நமது மக்களை அச்சுறுத்தும்படியாக புலனாய்வு பிரிவினர் படங்களையும் காணொளிகளையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் இந்த செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (24.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் பொலிஸாரும் இணைந்து மிகவும் அராஜகமான ஒரு செயலை எமது துயிலும் வீரர்களுக்காக கட்டப்பட்ட அந்த நினைவு தூபியினை உடைத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
மிகவும் எங்கும் நடக்காத ஒரு அராஜகமான செயலை இன்று இந்த வன பாதுகாவலர்களும் வாழைச்சேனை போலீசாரும் சேர்ந்து இந்த செயலை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும்
உண்மையில் மனது வலிக்கின்றது ஏன் இவ்வாறானதோர் செயலை அதுவும் ஒரு புனிதர்கள் இடம் உறங்கும் இடத்தை இவ்வாறு அடித்து உடைத்து இப்படிப்பட்ட மிலேட்சத்தனமான வேலையினை இவர்கள் செய்து அத்தோடு இன்று சந்திவெளி பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு செய்வதற்காக எமது அணி அங்கு சென்றிருந்தது இரவில் இருந்து காலை வரை பொலிஸாரை கொண்டு வந்து குவித்து மண்ணுக்காக மடிந்த அந்த வீரர்களின் பெற்றோர்கள் உணவை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்கு கூட பொலிஸார் வந்து இடம் தரவில்லை.
இவ்வாறு இன்னமும் என் மீது அராஜகத்தினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது இதை யார் கேட்பது? இதற்கான பதில் என்ன? முடிவு தான் என்ன இவ்வாறு நடந்து கொண்டிருந்தால்? மக்கள் ஒன்று கூட வேண்டும் மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 27 ஆம் திகதி நாங்கள் அங்கு விளக்கேற்றுவோம். இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அனைத்து மக்களும் அங்கு வரவும் என்ன நடந்தாலும் தரவை மாவீரர் துயலும் இல்ல ஏற்பாட்டு குழு அங்கு விளக்கு ஏற்றும் என்பதனையும் உங்களுக்கு சொல்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
