பொலிஸாரால் உடைத்தெறியப்பட்ட தரவை மாவீரர்களின் தூபி (Photos)
மட்டக்களப்பு கிரான் தரவையில் எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி பொலிஸாரால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
குறித்த துபியை இன்று(23.11.2023) வாழைச்சேனை பொலிஸார் தகர்த்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
நீதிமன்றத்தின் கட்டளை
சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திவெளி பகுதியில் மாவீரர் நினைவு வார நிகழ்வுகள் நடாத்துவதற்கு பொலிஸாரினால் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.
சந்திவெளி பகுதியில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டு நிகழ்வுக்கு தடையேற்படுத்தப்பட்டிருந்தது.
தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு குவிக்கப்பட்ட பொலிஸார் குறித்த நிகழ்வினை நடாத்தமுடியாது எனவும் அதனை மீறி நடாத்தினால் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து மாவீரர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு வந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அங்கிருந்தர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளதுடன் ஈகச்சுடர் ஏற்றவும் பெனர்களை கட்டுவதற்கும் நிகழ்வினை நடாத்துவதற்கும் தடை விதித்ததாகவும் தெரிவித்தனர்.
மேலதிக செய்தி- குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |