தியாகதீபம் திலீபனின் நினைவுதினம்: யாழ். நோக்கி தேராவில் இருந்து ஊர்தி பவனி (Photos)
தியாகதீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஷ்டிக்க விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் கலந்து கொள்வதற்காக தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி இளைஞர்களை குறித்த நிகழ்வில் இணைத்து கொள்ளும் முகமாக இந்த ஊர்தி பவனி முன்னெடுக்கப்படுகிறது.
ஊர்தி பவனி
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தியதை விசுவமடு, தர்மபுரம், பரந்தன், ஆனையிறவு, பளை, சாவகச்சேரி ஊடாக குறித்த ஊர்தி யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சென்றடைந்தது அங்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
