கைது செய்யப்பட்ட நான்கு பாடசாலை மாணவர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் பல்வேறு அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிணை
சிறுவர் என்ற காரணத்தினால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.