பேரனர்த்த நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்! குற்றச்சாட்டை நிராகரிக்கும் அரசாங்கம்..
பேரனர்த்த நிவாரணப் பணிகளில் அரச அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசு அடியோடு நிராகரித்துள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசு
"அரச அதிகாரிகளுக்கு அரச தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரச ஊழியர்களுக்குச் சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

"தேசிய மக்கள் சக்தி அரசுக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டு வருகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற நிதி முறையாகப் பயன்படுத்தப்படாததால் சர்வதேசம் நம்பிக்கை இழந்து இருந்தது.
ஆனால் எமது நிர்வாகப் பொறிமுறை மீது சர்வதேசத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது." - என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam