கிளிநொச்சியில் படைத்தரப்பு வசமிருந்த காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், , இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும் மக்களுக்கு கையளிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அரச திணைக்களங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் 40.9 ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள் உறுதிப்படுத்தி பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தமக்குரிய காணிகளை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரச காணியையும் மேலதிக அரசாங்க அதிபர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
