ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது.. நீதியமைச்சர் திட்டவட்டம்
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நானயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சட்டங்களின் கீழ், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட ரீதியான வாய்ப்புகள்
ஞானசார தேரருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள தண்டனைக் காலம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் உள்ள பௌத்த துறவிகளின் சீவர உடை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில தரப்பினர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையிலேயே, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் இக்கருத்து கவனம் பெற்றுள்ளது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan