பல பகுதிகளுக்கு மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது..
புதிய இணைப்பு
திடீர் மின்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 50 வீதமான பகுதிகளுக்கு தற்போது மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் இணைப்பு
நாடு தழுவிய மின்சாரத் தடையைத் தொடர்ந்து, பல மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்துள்ளதாக வெளியான செய்திகளை தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையம் (NSO) மறுத்துள்ளது.
எந்தவொரு மின் உற்பத்தி நிலையத்திலும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை குறித்த மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமது சமீபத்திய அறிவிப்பில், மின் கட்டமைப்பு செயலிழப்பதற்கு முன்பாகச் செயல்பாட்டில் இருந்த அனைத்து நீர்மின் நிலையங்களும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், தற்போது மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணிக்காக அவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் NSO தெரிவித்துள்ளது.
மின் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, முறையான நடைமுறைகளின்படியே நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டதாகவும், அது எந்தவிதமான இயந்திரக் கோளாறினாலும் ஏற்படவில்லை என்றும் NSO தெளிவுபடுத்தியுள்ளது.
மதியத்திற்குப் பிறகு, படிப்படியாகப் பல்வேறு பகுதிகளிலும் மின் விநியோகம் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இன்று ( 17) மாலை சுமார் 6:30 மணியளவில் தேசிய மின் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்படும் என்று NSO எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய மின் தடையைத் தொடர்ந்து, பல மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
இலங்கையின் முக்கிய நீர்மின் உற்பத்தி நிலையங்களான சமனலவெவ மற்றும் புதிய லக்சபான மின் நிலையங்களைத் தவிர, நுரைச்சோலை உள்ளிட்ட மற்ற அனைத்து மின் நிலையங்களும் தற்போது இயங்கவில்லை என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மின்தடையை தொடர்ந்து, இணைய வசதிகளும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
மேல் கொத்மலை நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கை முழுவதும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட பெரும் அமைப்புச் செயலிழப்பு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மின்சாரத் துறை பிரதி அமைச்சர் அக்ரம் இல்யாஸ், மின்சார விநியோகத்தைச் சீரமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இந்த திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் எவ்வித முன் அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri