கொழும்பை மிரட்டிய பிக்குகள் உட்பட 56 பேருக்கு ஆபத்து - அநுரவின் இறுதி முடிவும் வெளியானது
கொழும்பை நேற்றுமுழுவதும்(16.10.2026) பெரும் சவாலுக்கு உட்படுத்திய விடயம்தான் பௌத்த தேரர்களுடைய போராட்டம்.
பௌத்த தேரர் என்பதால் ஞானசார தேரருக்கு தீர்ப்பு வழங்கப்படக் கூடாது. ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டியவர் அல்ல என்ற கருத்துக்கள் முதலில் பௌத்த தேரர்களிடம் இருந்து வந்தது. பின்னர் அரசியல்வாதிகளிடம் இருந்தது. அதற்குப் பின்னர் ஆட்சிமாற்றம் தேவையானவர்களிடம் இருந்தது.
ஒட்டுமொத்தத்தில் ஞானசார தேரருக்கு தீர்ப்பை வழங்கியது அரசாங்கமா அல்லது நீதிமன்றமா என்ற கேள்வி இருந்தது.
இந்நநிலையில் குறித்த போராட்டம் அரகலயவுக்கு இணையான போராட்டமா என்கின்ற கேள்வி இருக்கின்றது.
அரகலய போராட்டம் பொது மக்களால் கோட்டாபயவுக்கும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகவும் நடத்தப்பட்டது. பௌத்த துறவிகளுடைய நேற்றைய போராட்டம் பார்த்தால் இலங்கையினுடைய நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இ்டம்பெற்ற போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 56 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....