வன்னி மாவட்டத்தில் காணப்படும் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
வன்னி மாவட்டத்தில் 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக 30 வருட கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வும், அதன் பின்னரான காலத்தில் தங்களது இடங்களிற்கு மக்கள் மீள்குடியேறியும் இருந்தனர்.
காணி பிரச்சினை
இந்நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும் போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும் வன பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சினை காணப்பட்டது. இதனால் குறித்த திட்டம் இங்கே நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம்.
விசேட குழு நியமனம்
அதில் வவுனியா மாவட்டத்தில் 22,804.40 ஏக்கர் நிலமும் மன்னார் மாவட்டத்தில் 17,https://we.tl/t-IL4SilT9cG882.8 ஏக்கர் நிலமும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 48,532.6 ஏக்கர் நிலங்களையும் விடுவிக்கப்பட இருக்கின்றது.
ஆனால் இவ்வாறு நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும் பிரச்சினைகள் மேலும் இருக்கின்றது என்பதை நாங்கள் தற்கால மேற்பார்வைகளின் மூலம் இனம் கண்டிருக்கின்றோம்.
எனவே அதனையும் தீர்க்கும் முகமாக நாங்கள் அமைச்சரவை மட்டத்திலே கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஒரு அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருந்தோம்.
அதாவது அந்த அமைச்சரவை தீர்மானத்தின் படி வன வள திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காணிகளை விடுவிப்பதற்காக அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்களாக ஒரு விசேடமான ஒரு குழுவினை நாங்கள் நியமித்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



