சர்வதேச நீதி கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில்(Vavuniya) காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (30.06.2024) குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரண சான்றிதழ்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ''எமக்கு சர்வதேச நீதியே வேண்டும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஓஎம்பி அலுவலகம் எமக்கு வேண்டாம், கையில் கொடுத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் எதற்கு, நாம் இழப்பீட்டை கோரவில்லை, கையில் தந்த எமது சிறுவர்கள் எங்கே'' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெனீற்றா, எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்.

ஓம்எம்பி அலுவலகம் எமக்கு தேவையில்லை எனக் கூறிய போதும் அதனை இரகசியமாக எமது பகுதிகளில் நிறுவியுள்ளார்கள். தற்போதைய ஜனாதிபதி ரணில் அவர்கள் கிராம அலுவலர் ஊடாக ஒஎம்பி அலுவலகத்தின் வேலைகைள முன்னெத்துள்ளார்.
வாழ்வாதார உதவிகளை வழங்கி எமது போராட்டத்தை மழுங்கடிக்க முற்படுகிறார்கள். இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டும். எமக்கு நீதி வேண்டும். உயிர் உள்ளவரை நீதிக்காக நாம் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam