ரணில் ஆட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி மீண்டும் பணியில்
கொழும்பு கோட்டை நீதவானாகப் பணியாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கோசல சேனதீரவை, உடனடியாகப் பணியில் மீண்டும் அமர்த்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, நிலுவையில் உள்ள அவரது சம்பளமும் வழங்கப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முறையான அனுமதியின்றி மின்சாரம் மற்றும் நீரைப் பெற்றுக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சேனதீரவின் சேவை கடந்த 2024 ஜூலை 10 முதல் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதியரசரின் தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழு நடத்திய நீண்ட மற்றும் முறையான விசாரணையைத் தொடர்ந்து அவர் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகளானது, 27 மாதங்களாக நடைபெற்றதுடன், இதில் 20க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளளன.
மேலும், கோசல சேனதீர, நீதிச் சேவையின் சிறப்புத் தரத்தில் (Special Grade) உள்ள மிக மூத்த நீதவானாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan