தீவிர நோய்களால் அவதியுறும் ஷிரந்தி.. இன்று வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி
கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவை இன்றையதினம், நண்பகல் 12.30 மணிக்கு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரிலிய சவியவில் இடம்பெற்ற நிதிக்குற்றம் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்ட அவரின் பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், அவரது சுகாதார நிலைமை தொடர்பான பல விவரங்களை அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பித்தனர்.
இதன்போது, 73 வயதான ஷிரந்தி ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு முதல் இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், 2021இல் மூளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு திடீர் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும் நிலை உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண் சிகிச்சை
அத்துடன், முதுகெலும்பு கோளாறு மற்றும் நரம்பு வீக்கப் பிரச்சினையால் (varicose veins) அவதிப்படுவதால் மற்றவர்களின் உதவியின்றி சில செயல்பாடுகளைச் செய்வது கடினம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், விளக்கமறியலில் வைப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அவரது மருத்துவ நிலைமைகளை விதிவிலக்கான சூழ்நிலையாகக் கருதி பிணை வழங்குமாறு கோரிய போதிலும், அவரை ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
விளக்கமறியல் உத்தரவையடுத்து, வைத்தியசாலையில் கண் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்சவை, அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் காண்பிக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திட்டமிடப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்காக இன்று நண்பகல் 12.30 மணிக்கு அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் சிரிலிய சவிய கணக்கு விசாரணை தொடர்பாக ஷிரந்தி ராஜபக்ச நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri