ரணிலின் இல்லத்திற்குத் தீ வைக்கப்பட்ட விவகாரம்.. 6 பேருக்கு விடுதலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பியத் நிகேஷல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நேற்று (07) விடுவிக்கப்பட்டனர்.
பயணத் தடைகள்..
2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற இந்தத் தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த பலரும் ஏற்கனவே சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எஞ்சிய 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், இவ்வழக்குடன் தொடர்புடைய 29 சந்தேகநபர்களுக்கும் எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையும் சுமார் 29 மாதங்களின் பின்னர் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam