வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
இஸ்ரேலில் கட்டுமானத்துறை தொடர்பான வேலைகளுக்கு தகுதியான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மேலும் இரண்டு நாட்களை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலைவாய்ப்பிற்காக தொழிலாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (03) முதல் 07 ஆம் திகதி காலை 9.00 மணி வரை பணியகத்தின் இணையத்தளம் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25-45 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் தொழில் சார்ந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் முன்னர் வேலை செய்யாத மற்றும் இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வசிக்கும் உறவினர்கள் இல்லாதோர் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
கட்டாயமாக்கப்பட்டுள்ள அம்சம்
மேலும் 3 ஆண்டுகளுக்கும் மேலான கால அவகாசம் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலின் காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளிற்கேற்ப பணிபுரிய உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் 10 வருட பாடசாலை படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை ஆங்கில அறிவினை பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும், இஸ்ரேலில் கட்டுமானத்துறை தொடர்பான வேலைகளுக்காக www.slbfe.lk என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைகளுக்கான பதிவு, நேர்காணல்கள், திறன் தேர்வு செய்தல் போன்ற விடயங்களுக்காக பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



