யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் போதைபொருள் பாவனை! டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம்
காரைநகர் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும் சம்பவ இடத்திற்கு வருகை தருவதாகவும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என காரைநகர் பிரதேச செயலாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த கடற்படையின் உதவியை நாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று (29.03.23) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையாது
குருநகர் ரோலர் மீன்பிடி படகு மூலம் அனலைதீவு கடற்றொழிலாளர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது குருநகர் மீன்பிடி சாசத்தின் தலைவரிடம் விளக்கம் கோரப்பட்ட போது அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் நஷ்ட ஈடுகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள்
இதனை மீறி செயற்பட்டால் குருநகரில் இருந்து பயணிக்கின்ற இழுவைமடி படகுகள் கையகப்படுத்தப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு கலாசாரத்தை நிறுத்துவதன் மூலம்
மக்களின் அச்சநிலையை போக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
