திறைசேரியின் டொலர் கையாடல் குறித்து நாடாளுமன்றில் விவாதிக்க அரசு மறுப்பு!- எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி
திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி, மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு கைமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கோரப்பட்ட விசேட நாடாளுமன்ற விவாதத்தை ஆளும் தரப்பு நிராகரித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பில் ஒரு நாள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்ட பொலிஸார் - சாணத்தால் தாக்கி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள்
திறைசேரியின் பொறுப்புக்கூறல்
எனினும், எதிர்க்கட்சியினரின் இந்தக் கோரிக்கையை ஆளும் தரப்பு ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது என்று எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் திறைசேரியின் பொறுப்புக்கூறல் குறித்த பாரிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்த விவாதத்துக்கு ஆளும் தரப்பு இடமளிக்காதது எதிர்க்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிதி மோசடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் Cineulagam