விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பரபரப்பை ஏற்படுத்திய பிக்குகள் - சிக்கிய பிரதான சூத்திரதாரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 பிக்குகள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்ட பாரிய கடத்தல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பிரதான சந்தேகநபரான பிக்குவிடம் பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும், இந்த வலையமைப்பு எவ்வாறு இயங்கியது என்பது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்ட பொலிஸார் - சாணத்தால் தாக்கி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள்
கடத்தல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி
கடத்தல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பிக்கு கைது செய்யப்பட்டு, எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையத்தில் ஏனைய பிக்குகள் பிடிபட்டதைத் தொடர்ந்து, மேற்படி பிரதான சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்று மீரிஸ்வத்தை பகுதியில் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட சமயம் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபானி அபேசேகர முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை சந்தேகநபர் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை மே மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளையும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஒழுங்குகளை இவரே மேற்கொண்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அனைத்துத் தொடர்புகளையும் 'வட்ஸ்அப்' ஊடாகவே இவர் கையாண்டுள்ளார்.
பயணப் பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 112 கிலோகிராம் எடையுடைய 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' ரக போதைப்பொருட்கள் இவரால் நிர்வகிக்கப்பட்டுள்ளன.
சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும், இந்த வலையமைப்பு எவ்வாறு இயங்கியது என்பது குறித்தும் மேற்படி பிரதான சந்தேகநபரான பிக்குவைப் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.