நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்ட பொலிஸார் - சாணத்தால் தாக்கி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள்
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று காலை (28) பெலவத்தை, அக்குரேகொடாவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளரின் இல்லத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலர் மீது சாணத்தால் தாக்குதல்
இதன்போது ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு அருகே குறித்த குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து அங்கிருந்தவர்களால் முட்டை மற்றும் சாண வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
இதனைடுத்து, நிலைமையைச் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் இரு குழுக்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களை அகற்றியுள்ளனர்.
ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam