கிழக்கில் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையால் மரநடுகை வாரம் ஆரம்பித்து வைப்பு (Video)
கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கடந்த திங்கட்கிழமை (20.11.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
“ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்னும் தொனிப்பொருளில் இந்த மரநடுகை வார செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மர கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (24.11.2023) திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளைய தினம் அம்பாறை மாவட்டத்திலும் இடம் பெறவுள்ளது.
திருகோணமலையில் நிலாவெளி, வெருகல் ஆகிய பிரதேசங்களிலும் மட்டக்களப்பில் வாகரை, வந்தாரமுல்லை ஆகிய பிரதேசங்களிலும் அத்துடன் அம்பாறையிலும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டவுள்ளன.
இதன்போது பிரபல தொழிலதிபரான கந்தையா பாஸ்கரனினால் மக்களுக்கு மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்





