இலங்கையில் குழந்தைகள் விற்பனை: நோர்வே பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், கண்டி பிரதேசத்தில் நீண்டகாலமாக செயற்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் இந்தக் கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த ஆட்கடத்தலுக்கு உள்ளாகி தற்போது நோர்வேயில் வசிக்கும் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
விரிவான விசாரணை
சுமார் 1 மாத குழந்தையாக இருந்தபோது, அதாவது 1992 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு தம்பதியருக்கு தாம் கொடுக்கப்பட்டதாகவும், அண்மையில் தான் தனது பெற்றோரைத் தேட ஆரம்பித்ததாகவும் குறித்த பெண்ணின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனது பெற்றோர் இலங்கையர்கள் எனத் தெரியவந்ததையடுத்து அவர்களைத் தேடி இலங்கை வந்ததாகவும், இதனால் தனது தாயைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக கண்டியில் உள்ள ஒருவருக்கு தாம் கொடுக்கப்பட்டதாகவும், தனது சகோதரரும் அவ்வாறே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கண்டியில் உள்ள குறிப்பிட்ட கும்பல் ஒன்று போலியான ஆவணங்களை தயாரித்து குழந்தைகளை அழைத்து சென்று வெளிநாட்டு நபர்களுக்கு விற்பனை செய்வதாக தனது தாய் தெரிவித்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று (23.11.2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டி பிரதேசத்தில் இருந்து செயற்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை
இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும் இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam