விசேட வடிவமைப்பில் இயக்கச்சியில் தமிழர் பாரம்பரிய உணவகம்! (Video)
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சைவ உணவகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகமானது (ReeCha Organic Farm) சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதிய திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சைவ உணவகமானது சுவையருவி என்னும் பெயரில் தமிழ் தொழிலதிபரும் ஐ.பி.சி மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரனினால் நேற்று (23.12.2023) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதில் தாயகத்தின் கலைஞர்கள் எம்.சி சாய், ஆதித்தன், ஆர்யன் தினேஸ் கணகரட்ணம், மாங்கி அருள்பிரகாசம், வாகீசன் இராசையா, விது சான் தாயக
ஊடக ஜாம்பவான்கள் எம்.எச் அப்துல் ஹமீத், ஏ.ஆர்.வி லோசன், மாணிக்கவாசகர், பாரதிராஜன், எஸ்.கே.ராஜன், அபர்ணா சுதன், ஜீவானந்தம், ஆனந்தி, இளையபாரதி, ஆர்ஜே சந்ரு
தாயக பெண் ஆளுமைகள் மனோன்மணி சண்முகதாஸ், சித்திரலேகா மௌனகுரு, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழினி, பத்மா சோமகாந்தன், குறமகள், அன்னைபூபதி, வள்ளியம்மை சுப்பிரமணியம், தர்சினி சிவலிங்கம், பிரமிளா சிவப்பிரகாசப்பிள்ளை
தாயக எழுத்தாளர்கள் எஸ்.பொ, கே.டானியல், கோகிலா மகேந்திரன், கார்த்திகேசு சிவதம்பி, இலங்கையர்கோன், செங்கை ஆழியன், காரை சுந்தரம்பிள்ளை, கோகிலம் சுப்பையா, தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, தாமரைச்செல்வி
தாயக கவிஞர்கள்சோ.ப , புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், பிரமிள், முருகையன், கல்லடி வேலுப்பிள்ளை, சில்லையூர் செல்வராசன், சோலைக்கிளி, து.உருத்திரமூர்த்தி, மேமன்கவி
தாயக கலைஞர்கள் முல்லை யேசுதாசன், நா.கணபதிப்பிள்ளை, சிட்டு, ராஜேஸ்வரி சண்முகம், இ.இரத்தினம், எஸ்.ராம்தாஸ், கமலினி செல்வராஜன், ஸ்ரீதர் பிச்சையப்பா, வை. சச்சிதானந்தசிவம், தம்பையா ராஜகோபால், பேராசிரியர் மௌனகுரு,
தாயக ஊடகவியலாளர்கள் தர்மரத்தினம் சிவராம், பொன்னையா மாணிக்கவாசகம், க.கைலாசபதி,நா . பொன்னையா, விமல் சொக்கநாதன், மயில்வாகனம் நிமலராஜன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி
தாயக இசையமைப்பாளர்கள் இசைவாணர் கண்ணன், எம்.பி.பரமேஸ், கந்தப்பு ஜெயந்தன், பிரபாலினி பிரபாகரன், ஷமீல், இசைப்பிரியன்
தாயக பாடகர்கள் சாந்தன், குட்டிகண்ணன், தேனிசை செல்லப்பா, ஏ.ஈ.மனோகர், பார்வதி சிவபாதம், பொன் சுந்தரலிங்கம்
தாயக நாதஸ்வர தவில் வித்துவான்கள் அளவெட்டி என்.கே.பத்மநாதன், பஞ்சமூர்த்தி குமரன், பஞ்சாபிகேசன், என்.ந்தகுமார், தட்சிணாமூர்த்தி, புண்ணியமூர்த்தி ஆகியோர்களது புகைப்படங்களும் இந்த உணவகத்தில் இடம்பிடத்துள்ளன.
அத்தோடு சைவ உணவகமானது தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுவையருவி உணவகத்தில் தமிழர் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
