பிரித்தானியாவில் உயர்த்தப்படும் வருவாய் இலக்கு: அதிருப்தியில் புலம்பெயர் மக்கள்
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத புலம்பெயர் மக்கள் தங்கள் குடும்பத்தினரை, நாட்டிற்குள் வைத்துக்கொள்ளமுடியும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டின் வசந்த காலத்தில், பிரித்தானியரல்லாத குடும்பத்தினரை தங்களுடன் வைத்துக்கொள்ள அனுமதிக்கும் வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் வைத்துக்கொள்ளமுடியும் எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட விடயம் நாட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது.
ரிஷி சுனக்
அதன் பின்னர் அந்நாட்டு உள்துறை அலுவலகம், 38,700 பவுண்டுகளுக்கு பதிலாக, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள், பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மீண்டும் வருவாய் இலக்கானது 2025இல் 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |