இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
ட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது.
குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியுள்ளது.

கடல்சார் நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்
மேலும் இந்த கப்பல் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இரண்டு கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கப்பலில் சில கட்டமைப்பு சேதங்கள் பதிவாகியுள்ளதோடு முன்னதாக இந்த கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்ற நிலையில் இந்திய துறைமுகத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam