யாழ்ப்பாணத்திற்கு பாலைமரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது (Photos)
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டிப்பர் வாகனம் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் அறுக்கப்பட்ட பாலைமரக்குற்றிகளை யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்டவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறி்த்த சந்தேக நபரை இன்று (23.12.2023) பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனை நடவடிக்கை
பதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து டிப்பர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே.கேரத் தலைமையிலான பந்துரத்தனாயக்க, ஜெயசூரிய, பிரதீபன் உள்ளிட்ட பொலிஸ் உறுப்பினர்களை கொண்ட குழுவே குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வள்ளிபுனம் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற குறித்த டிப்பர் வாகனம் தேராவில் பகுதியில் மறித்து சோதனை செய்தவேளை டிப்பருக்குள் பாலைமரக்குற்றிகளை போட்டு அதன்மேல் சல்லிக்கற்களை போட்டு மறைத்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லமுற்பட்ட போதே இவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், மீட்கப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய பாலைமரக்குற்றிகள் மற்றும் டிப்பர் வாகனம் என்பவற்றையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |