திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து தீக்கிரை
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காக கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (11.10.2026) அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளது.
ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144ஆம் கட்டைப் பகுதியில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்தப்பிய சாரதி மற்றும் உதவியாளர்
சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் சாரதியும், உதவியாளரும் மாத்திரமே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலைக்கு வரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
