சாமர சம்பத் தசநாயக்கவிற்கு CIABOCயினால் மீண்டும் அழைப்பாணை
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) முன்னிலைகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக அழைப்பு
கடந்த வெள்ளிக்கிழமை (09) அன்று ஆணைக்குழுவின் முன் முன்னிலைகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாக தவறியதைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'லங்கா பாஸ்பேட்' (Lanka Phosphate Limited) நிறுவனம் மூலம், முறையான கொள்முதல் வழிமுறைகளை மீறி மூன்று தனியார் நிறுவனங்களுக்கு பாஸ்பேட் சுரங்க உரிமங்கள் மற்றும் ஏற்றுமதி அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்! ஏற்பட்டுள்ள பரிதாபநிலை