மற்றுமொரு கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு
கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி, நேற்று (01) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டண குறைப்பு
இதேவேளை, முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கும் நிலையில் தாம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கான சட்டப்பூர்வ உரிமை மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலைகள்
அத்துடன், எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தையும் 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில் நாட்டில் பல்வேறு விலைகுறைப்புகள் மேற்றக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்க்க விடயமாகும்.