யாழில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது முன்னெடுக்கப்படுகிறது.
கொக்குவில் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விஜயம் மேற்கொண்டதோடு வீடுகளில் டெங்கு நுளம்பு காணப்படும் இடங்கள் அகற்றப்பட்டதோடு பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 23 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
