ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இன்று(21) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்
தொடர்ந்தும் உரையாற்றுகையில், தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 4,240ஆகவும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2,827ஆகவும் காணப்படுகின்றது.
தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 11,274ஆகவும் தமிழ் மொழியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை 6,121 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.
அந்தவகையில் இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் குறித்த ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
