ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலைபோன அவுஸ்திரேலிய வீரர்
அவுஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக பட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் இந்த முறை 20 கோடி இந்திய ருபாய் இலக்கானது எட்டப்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது.
தொடர்ந்து, 24.75 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் மிட்செல் ஸ்டார்க் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
எஞ்சியுள்ள தொகை
முதன் முறையாக பேட் கம்மின்ஸ் 20.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட அதனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி இந்திய ரூபாய் என்ற இமாலய தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
மேலும், இந்த வருடம் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட்டும் சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, தற்போது டுபாயில் நடைபெற்று வரும் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6.95 கோடி இந்திய ரூபாய்கள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல்-இல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்கள்:
மிட்செல் ஸ்டார்க்- ரூ. 24.75 கோடி
பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடி
சாம் கரண் ரூ.17.5 கோடி
கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |