சி.எஸ்.கேயின் ஏல அணுகுமுறையில் மாற்றம் : அணியில் இடம்பிடித்த நியூசிலாந்து வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தி நியூசிலாந்து வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை வாங்கியுள்ளது.
கடந்த கால ஐ.பி.எல் ஏலங்களில் சி.எஸ்.கே அணியானது தொடக்கத்தில் வீரர்களை ஏலம் எடுக்காது இறுதியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் அணுகுமுறையை பயன்படுத்தி வந்தது.
இந்த காரணத்தினால் சி.எஸ்.கே அணி இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அணுகுமுறை மாற்றத்துக்கு காரணம்
ஆனால் இந்த முறை இளம் வீரர்கள் மற்றும் உலகக்கோப்பையில் பிரகாசித்த வீரர்களை குறிவைத்து ஏலத்தில் ஈடுபட்டு வருவதோடு ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது சி.எஸ்.கே அணி.
குறிப்பாக நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி இந்திய ரூபாய்க்கும் டேரில் மிட்செல்லை 14 கோடி இந்திய ரூபாய்களுக்கும் முறையான திட்டத்துடன் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.
தொடர்ந்து, கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயற்பட்ட டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்காக சன்ரைஷர்ஸ் அணியுடன் ஆறரை கோடி வரை சி.எஸ்.கே அணி போட்டி போட்டுள்ளது.
சி.எஸ்.கே அணியின் இந்த திடீர் அணுகுமுறை மாற்றத்துக்கு காரணமாக கடந்த வருடத்தில் அந்த அணி வீரர்களின் ஓய்வு மற்றும் இந்த வருடம் தொடரவிருக்கும் ஓய்வுகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது.
மேலும், 2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் தற்போது டுபாயில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |