ஜப்பானின் நிதியுதவியுடன் வடக்கில் 95 பாடசாலை கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை
ஜப்பானின் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியில் வடக்கில் 95 பாடசாலை கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கும் சேவா லங்கா நிறுவனமானது ஜப்பானின் நிப்பொன் பவுண்டேசன் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் குறித்த பாடசாலைகள் புனரமைக்கப்பட உள்ளது.
வடமாகாணத்தில் 95 பாடசாலை கட்டிடங்களை புனரமைத்தல் மற்றும் புதிதாக நிர்மாணித்தல் போன்ற வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.
புனரமைக்க நடவடிக்கை
அதன் ஒரு கட்டமாக வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தின் மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் ஒன்றினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து வருகை தந்த நிப்பொன் பவுண்டேசன் உயர் அதிகாரிகள், சேவாலங்கா நிறுவனத்தினர் ஆகியோர் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு விஜயம் செய்து குறித்த சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
