அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நெல்லுக்கான விலை: விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை
தற்பொழுது அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நெல்லுக்கான விலை தமக்கு போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிவப்பு நெல்லுக்கு 120 ரூபாவாகவும், சம்பா நெல்லுக்கு 125 ரூபாவாகவும், கீரிச்சம்பா நெல்லுக்கான விலை 132 ரூபாவாகவும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெல்லுக்கான விலை
விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்து வரும் நிலையில் நெல்லுக்கான விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது மழை வெள்ளத்தில் ஈரமான நெல்லினையே 8000 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடியதாக வயல்களிலே வந்து தனியார் கொள்வனவு செய்கின்றனர்.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு எம்மால் கொண்டு சென்று அங்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது.
விவசாயிகளாகிய எமக்கு இம்முறை பாரிய மழை வெள்ளம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக அழிவை ஏற்படுத்தி உள்ளது.
கோரிக்கை
இந்நிலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு கூட நெல்லை விற்பனை செய்தாலும் எமது நஷ்ட ஈட்டினை மீள பெற முடியாத நிலையில் விவசாயிகள் ஆகிய நாம் பெரும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

அத்துடன், சந்தையில் அரிசியை கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படாத வகையில் 140 ரூபாய் அல்லது 130 ரூபாய் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஓரளவு போதியதாக அமைந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (5) அரசாங்கத்தினால் நெல் களஞ்சிய சாலைகள் நெல் கொள்வனவுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam