மட்டக்களப்பு கருணாகரன் விளையாட்டு மைதானத்தை புணரமைக்குமாறு வியாழேந்திரன் ஆலோசனை
மட்டக்களப்பு - பாலமுனை, கருணாகரன் விளையாட்டு மைதானத்தை உடன் புனரமைப்புச் செய்யுமாறு வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாலமுனை கருணாகரன் விளையாட்டுக் கழகத்தினார் இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அப்பகுதிக்கு விஜயம் செய்து விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலமையை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, விளையாட்டு மைதானம் கடந்த வெள்ளப் பெருக்கினால் பழுதடைந்துள்ளதோடு, சகதி நிறைந்தாகவும் காணப்பட்டுள்ளது.
வியாழேந்திரனின் ஆலோசனை
எனவே, குறித்த விளையாட்டு மைதானத்திற்கு மண் இட்டு உடன் செப்பனிடுவதற்குரிய வேலைகளை மேற்கொள்ளுமாறு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் செயலாளருக்கு வியாழேந்திரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, இராஜாங்க அமைச்சருக்கு பாலமுனை கருணாகரன் விளையாட்டுக் கழகத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |