விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு! ஏன் இந்த திடீர் அறிவிப்பு:வெளியான தகவல்-செய்திகளின் தொகுப்பு
13வது திருத்தச்சட்டத்தை அண்மையில் பௌத்த பிக்குகளால் எரிக்கப்பட்டதன் நோக்கம் ஈழ தமிழ் மக்களை எச்சரிப்பதற்காக அல்ல என்றும் மாறாக இந்தியாவை எச்சரிக்கவே என அரசியல் ஆய்வாளரான பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்று பிரபாகரனின் இருப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
மேலும் கூறுகையில்,13வது திருத்தச்சட்டத்தை அண்மையில் பௌத்த பிக்குகளால் எரிக்கப்பட்டது.இந்த பிக்குகளின் செயலால் இந்தியா கோவமடைந்து, இதற்காக வெளியிடப்பட்ட செய்தியே பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தத்தை எரித்தமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்திய உளவுத்துறை கையில் எடுத்த ஆயுதமே பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்றும் அதற்காக காசி ஆனந்தனையும் பழ.நெடுமாறனையும் இந்திய உளவுத்துறை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளதாக பாலகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயல்கள் மூலம் இந்தியா மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை எச்சரிப்பதற்காக தமிழர்களின் உன்னதமான விடுதலைப் போராட்டதையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இந்தியா அதனை கையில் எடுத்துள்ளது.
இந்திய உளவுத்துறையே ஒரு அறிக்கை ஒன்றை தயாரித்து இவர்களிடம் கொடுத்து வாசிக்க வைத்துள்ளதாக பாலகிருஸ்ணன் சுட்டிக்காட்டுகின்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
