செம்மணியும் மன்னாரில் தோண்டப்பட்ட ஒல்லாந்தர் கால எலும்பு கூடுகளா..! கேள்வி எழுப்பும் முன்னாள் கடற்படை அதிகாரி
மன்னாரில் 2013 -2014 ஆம் ஆண்டுகளில் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் ஒல்லாந்தர் காலப்பகுதிக்குரியது என உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுகாப்பு வலயத்தின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்ட டி. கே. பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செம்மணி மனித புதைகுழி
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வெளிநாட்டு காபன் பரிசோதனை மற்றும் DNA பரிசோதனைகள் செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நிச்சயம் நடைபெற வேண்டிய விடயமாகும்.
இன்றைய நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் அப்போது இந்த மன்னார் புதைகுழி தொடர்பில் பேசப்பட்டது. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களே குறித்த புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எழும்பு கூடுகள் ஆகும் என ஜெனீவாவில் பேசப்பட்டது.
ஆனால் அவ்வாறு இல்லை என தெரியவந்ததன் பின்னர் மாநாட்டில் மன்னிப்புக் கூட கேட்கவில்லை. அதேபோலவே இன்றும் ஜெனீவாவில் செம்மணி தொடர்பில் பேசப்படுகிறது. அதனாலே பரிசோதனைகள் அவசியமானதாகும். செம்மணி புதைகுழி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது.
போர் காலத்தில் யாழ்.பகுதியை பலர் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை ஆகியவற்றோடு தமிழீழ விடுதலைப்புலிகளே பெருமளவான காலம் யாழ்.பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஆனாலும் இவை 1998ஆம் ஆண்டுக்கானது என்றே கூறப்படுகிறது. மேலும் சுனாமியிலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆதலால் காலத்தை தொடர்புபடுத்தி ஆய்வு கூட பரிசோதனைகளிலே கண்டறிய முடியும்.
மக்களை காப்பாற்றி பருத்தித்துறை முகாம்களுக்கு
நாங்கள் மக்களை மீட்கும் மனிதாபிமான போரையே முன்னெடுத்தோம்.உதாரணத்திற்கு, நிலப் பகுதியில் மக்கள் வந்தது போல் கடலிலும் மக்கள் வந்தனர். முல்லைத்தீவு கடற்பகுதியில் கடற்படை கப்பல்கள் நான்கு வலயங்களாக பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
அப்போது நான் தான் கட்டளைத் தளபதியாக செயற்பட்டேன்.பொது மக்கள் இயந்திரங்களை களவாடி படகுகளில் துடுப்பின் துணையில் கூட கடற்படை பக்கம் காப்பாற்றுமாறு வந்தனர்.
நாம் 13,000 மக்களை காப்பாற்றி பருத்தித்துறை முகாம்களுக்கு கொண்டு சென்றோம். அந்த முகாம்களை செஞ்சிலுவைச்சங்கம்(ICRC) நடத்தியது.
இறுதி போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தலைவரின் மனைவி மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினருடன் இரவு 11 மணிக்கு படகில் வந்தனர். அச்சந்தர்ப்பத்தில் தற்கொலை படகு என சுட்டுவீழ்த்தியிருக்கலாம்.
ஆனால் எங்களுக்கு கிடைத்த புலனாய்வு தகவின் படி நாம் அவர்களை காப்பாற்றி சமூகத்தில் விட்டோம். இவ்வாறான பல மனிதாபிமான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டோம். அதற்கு நான் ஒரு சாட்சியாவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
